உள்ளூர் செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-13 12:10 IST   |   Update On 2022-12-13 12:10:00 IST
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
  • 20க்கும் மேற்பட்டோர் கைது

கரூர்:

கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குளித்தலை ஒன்றிய செயலாளர் முத்துசெல்வன் தலைமையில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குளித்தலை வட்டம் மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட விஸ்வநாதபுரம் பகுதியில் தார் சாலை, தெரு விளக்கு ஆகியன அமைத்துத்தர வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற 20க்கும் மேற்பட்டோரை தாந்தோணிமலை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News