உள்ளூர் செய்திகள்
- காரில் கடத்தப்பட்டதாக தந்தை போலீசில் புகார்
- நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்
கரூர்,
அரவக்குறிச்சி அருகே, சிறுமியை கடத்தி சென்றதாக, நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள ஆர். புதுப்பட்டி பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுமி, அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திண்டுக்கல் மாவட்டம், ஈட்ட மணநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த வேல்முருகன், நாகராஜன், தங்கராஜ், தண்டபாணி ஆகிய, நான்கு பேரும் சிறுமியை காரில் கடத்தி சென்றதாக, சிறுமியின் தந்தை, அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் வேல்முருகன் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.