உள்ளூர் செய்திகள்

கரூர் ஜெய்ராம்ஸ் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்

Published On 2023-06-24 13:23 IST   |   Update On 2023-06-24 13:23:00 IST
  • கரூர் ஜெய்ராம்ஸ் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கபட்டது
  • சிறப்பு அழைப்பாளராக கோவை ஈஷா யோகா மைய பயிற்சியாளர் சிவசங்கர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கினார்.

கரூர்,

கரூர், காக்காவாடி ஆட்டாம்பரப்பில் உள்ள ஜெய்ராம்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று 2023-24-ம் கல்வியாண்டிற்கான முதலா மாண்டு மாணவர்களின் வகுப்பு தொடக்கவிழா நடைபெற்றது. இதற்கு கல்லூரி தாளாளர் பொறியாளர் ஆர். ராமசாமி தலைமை தாங்கி பேசுகையில், தற்போதைய கல்வி கற்கும் சூழ்நிலையை எடுத்து கூறி கல்லூரியில் உள்ள எண்ணற்ற வசதிகளை நன்கு பயன்படுத்தி வாழ்வில் மேன்மை அடைய வேண் டும் என்றார்.

கல்லூரி முதல்வர் ஜே.ஸ்டீபன் ராஜா சிறப் புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக இன்கிளைன் டிரைனர் நிறுவனத்தின் சி.இ.ஓ. யுவராஜ் கண்ணன் கலந்து கொண்டு, மாணவர்களை உற்சாகப்படுத்தி இன்றைய சமுதாய சூழ் நிலைகளையும், மாணவர்கள் கல்வி திறன் மேம்பாட்டை எவ்வாறு மேம்படுத்துவது என்று எடுத்து கூறினார். இதில், பேராசிரியர்கள், அனைத்து முதலாமாண்டு மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

ஜெய்ராம்ஸ் கலை-அறிவியல் கல்லூரியில் முன்னதாக உலகயோகா தினத்தை முன்னிட்டு ஜெய் கலை- லூரி, கோவை ஈஷா யோகா மையமும் இணைந்து உலக யோகா தின விழாவை கொண்டாடியது. இதற்குகல் லூரி தாளாளர் பொறியாளர் ஆர்.ராமசாமி தலைமை தாங்கினார். முதல்வர் ஜே.ஸ்டீபன் 'ராஜா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கோவை ஈஷா யோகா மைய பயிற்சியாளர் சிவசங்கர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கினார். இதில் கல்லூரி யின் அமைப்புகளான என். சி.சி., என்.எஸ்.எஸ்., ஒய்.ஆர். சி.மற்றும் பசுமை மன்றம் ஆகியவற்றை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டணர்.

Tags:    

Similar News