உள்ளூர் செய்திகள்

கரூர் சி.எஸ்.ஐ. பிஷப் சாலமன் துரைசாமி கல்லூரியில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட விழிப்புணர்வு நிகழ்வு

Published On 2023-02-26 06:40 GMT   |   Update On 2023-02-26 06:40 GMT
  • கரூர் சி.எஸ்.ஐ. பிஷப் சாலமன் துரைசாமி கல்லூரியில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது
  • சிறப்பு விருந்தினர்கள் மாணவ, மாண–விகள் எழுப்பிய காச நோய் தொடர்புடைய சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர்

கரூர்:

கரூர் சி.எஸ்.ஐ. பிஷப் சாலமன் துரைசாமி கல் லூரியில் மாணவ, மாண–விகளுக்கான தேசிய காசநோய் ஒழிப்புத்திட்ட விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி–யின் முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையா–ளர் விஜய்குமார், மற்றும் பன்மருந்து எதிர்ப்பு காச–நோய் ஒருங்கி–ணைப் பாளர் நாகரா–ஜன் ஆகி–யோர் கலந்து கொண்டு காசநோய் பற்றிய விழிப்பு–ணர்வை ஏற்படுத்தி–னர். முன்னதாக ஆங்கிலத் துறை உதவிப்பேராசிரியர் சாம் கோல்டன் பிரார்த் தனை செய்தார்.

கல்லூரி முதல்வர் முனைவர் உமேஷ் சாமுவேல் வர–வேற்று பேசுகையில், நோய் இல்லாத சமூக வாழ் வின் அவசியத்தை பற்றி–யும் வரும்முன் காக்கும் பேராற்றல் பற்றியும் எடுத்து–ரைத்தார்.பன்மருந்து எதிர்ப்பு காச நோய் ஒருங்கிணைப் பாளர் செ.நாகராஜன், முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் விஜய் குமார் ஆகியோர் விழிப் பு–ணர்வின் அவசியம் குறித்து விரிவாக எடுத்து–ரைத்தனர்.

சிறப்பு விருந் தினர்கள் மாணவ, மாண–விகள் எழுப்பிய காச நோய் தொடர்புடைய சந்தேகங்களுக்கு விளக்க–மளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு தொடர்புடைய துண்டு பிரசு–ரங்கள் வழங்கப்பட்டது.நிறைவாக கணிதவியல் துறை உதவிப் பேப்பேராசி–ரியர் முனை–வர் லிவிங்ஸ்டன் நன்றி கூறினார்.


Tags:    

Similar News