உள்ளூர் செய்திகள்
- கரூரில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது
- 224 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கபட்டது
கரூர்,
கரூர் அரசு கலைக்கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 26 நிறுவனங்கள் கலந்து கொண்டு நேர்முக தேர்வு நடத்தின. கரூரை சேர்ந்த 600 மேற்பட்டோர் இந்த நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர். இதில் 224 பேரை தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்தனர். தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு, அரசு கலைக் கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர் பணி நியமன ஆணையை வழங்கினார். மாவட்ட நிர்வாகப் பிரதிநிதி தமிழ் வசந்தன், தாவரவியல் துறைத் தலைவர் கார்த்திகேயன், கல்லூரியில் செயல்படும் கல்லூரி வேலை வாய்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் முகுந்தன் உள்ளிட்ட, கல்லூரியில் பணியாற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.