உள்ளூர் செய்திகள்
திருமாநிலையூரில் கஞ்சா விற்றவர் கைது
- கருர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூரில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்
- ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது
கரூர்,
கருர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூரை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பசுபதிபாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த பகுதியில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றதாக கிருஷ்ணராயபுரம் பகுதியை சேர்ந்த தேவா (வயது 35) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு, அவரிடம் இருந்து அரிவாள் ஒன்றையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.