உள்ளூர் செய்திகள்
அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததை கண்டித்து கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
- அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததை கண்டித்து கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
- இதில் பவ்வேறு கோஷங்களை எழுப்பினர்
கரூர்,
கரூர் மாவட்டம் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் மாவட்டச் செயலாளர் அருள் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோத சோதனை, கைது, சித்ரவதை செய்த பா.ஜ.க. மோடி அரசின் அமலாக்க துறையை கண்டித்தும், உடனே விடுதலை செய்ய கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தமிழ்நாடு வீடு கட்டுவோர் கூட்டுறவு நல சங்க தலைவர் சாமியப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய பொறுப்பாளர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.