உள்ளூர் செய்திகள்

வாகன விதிமுறைகளை மீறிய 4,731 பேர் மீது வழக்கு

Published On 2022-10-10 14:26 IST   |   Update On 2022-10-10 14:26:00 IST
  • வாகன விதிமுறைகளை மீறிய 4,731 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
  • ரூ.5 லட்சத்து 43 ஆயிரத்து 300 அபராதம்

கரூர்

கரூர் மாவட்டம், குளித்தலை, தோகைமலை, லாலாபேட்டை, மாயனூர், சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குளித்தலை போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் செய்த வாகன சோதனையில் லாரியில் அதிக பாரம் ஏற்றிவந்தது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது, ஓட்டுனர் உரிமம் இல்லாதது, தலைகவசம் அணியாதது, இன்சூரன்ஸ் இல்லாதது, 3 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது, உரிய நம்பர் பிளேட் பொருத்தாமல் இருந்தது, சரக்கு வேன்களில் ஆட்களை ஏற்றுவது, தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்துவது, சீட் பெல்ட் அணியாதது போன்ற பல்வேறு வாகன விதிமீறல்களில் ஈடுபட்ட 4,731 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.5 லட்சத்து 43 ஆயிரத்து 300 அபராதம் குளித்தலை போக்குவரத்து போலீசாரால் விதிக்கப்பட்டுள்ளது என்று குளித்தலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசு தெரிவித்தார்."

Tags:    

Similar News