உள்ளூர் செய்திகள்
லாட்டரி டிக்கெட் விற்ற 2 பேர் மீது வழக்கு
- லாட்டரி டிக்கெட் விற்ற 2 பேர் மீது வழக்கு பதியப்பட்டது
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கரூர்
கரூர் அருகே, லாட்டரி டிக்கெட்டுகள் விற்றதாக 2பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள் ளனர்.
கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை யூனியன் அலுவலகம் அருகே, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்த மோகன்ராஜ் (வயது 65), குமார் (45) ஆகிய 2 பேரை பிடித்து அவர்கள் மீது தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.