உள்ளூர் செய்திகள்

தோகைமலையில் மீண்டும் 108 ஆம்புலன்ஸ் சேவை

Published On 2023-04-13 13:17 IST   |   Update On 2023-04-13 13:17:00 IST
  • இட வசதி இல்லாத காரணத்தால் நிறுத்தப்பட்டது
  • பொதுமக்கள் மகிழ்ச்சி

கரூர்

கரூர் மாவட்டம், தோகைமலையில் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமக்கள் வசதிக்காக கடந்த 10 ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் சேவை பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்தநிலையில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறையும், டிரைவர்கள் தங்குவதற்காக இட வசதி இல்லாத காரணத்தால் கடந்த சில நாட்களாக 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தோகைமலை அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்துவதற்கும் இடமும், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தங்குவதற்காக இடமும் தயார் செய்து கொடுத்தனர். இதையடுத்து தோகைமலையில் 108 ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News