கருணாநிதி 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலை வரை மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் பேரணியாக வந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.
கிருஷ்ணகிரி தி.மு.க சார்பில் கருணாநிதி 5-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
- மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
- அண்ணா உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கிருஷ்ணகிரி,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்று அண்ணா உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன், மாவட்ட அவை தலைவர் நாகராஜ், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் டேம். வெங்கடேசன், மாவட்ட துணைச் செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசு மூர்த்தி, நகர செயலாளர் நவாப், நகர் மன்ற தலைவர் பரிதா நவாப், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லாம், உட்பட தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.