உள்ளூர் செய்திகள்

வள்ளி தேவசேனா சமேதராக சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தஞ்சை பூக்காரத்தெரு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை வழிபாடு

Published On 2023-10-31 14:56 IST   |   Update On 2023-10-31 14:56:00 IST
  • 12 கார்த்திகை நட்சத்திரம் அன்று முருகனை தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் கைகூடும்.
  • சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் பூக்கார த்தெருவில் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.

இங்கு வள்ளி தேவசேனா சமேதராக சுப்பிரமணிய சுவாமி மூலஸ்தானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இங்கு மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரம் அன்றும் வளர்பிறை சஷ்டி அன்றும் சிறப்பு வழிபாடு நடை பெறுவது வழக்கம்.

தொடர்ந்து 12 கார்த்திகை நட்சத்திரம் அன்று முருகனை தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் என்பது ஐதீகம்.இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் நேற்று ஐப்பசி மாத கார்த்திகை நட்சத்தி ரத்தை முன்னிட்டு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் , அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனையும் தீபாராதனையும் நடந்தது. மாலையில் சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளி த்தார். கோவில் உட்பிரகா ரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார்கள். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News