உள்ளூர் செய்திகள்
தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் மேற்கு மாவட்ட காங்கிரசார் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய காட்சி
கர்நாடகா தேர்தல் வெற்றி:தேன்கனிக்கோட்டையில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
- தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
- அசன் ராஜா, சுயேபுதீன், இத்ரீஸ் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.
தேன்கனிக்கோட்டை,
கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்டில், மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதில் மாநில செயலாளர் அன்வர், பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், நகர தலைவர் பால்ராஜ், மாவட்ட துணைத்தலைவர் சபியுல்லா வட்டார தலைவர்கள் அன்புநாதன், லாசர், முனிசாமி ரெட்டி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர்கள் மஞ்சு , அசன் ராஜா. சுயேபுதீன், இத்ரீஸ் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.