உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் நாளை நடைபெறும் மே தின பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும்

Published On 2023-04-30 07:39 GMT   |   Update On 2023-04-30 07:39 GMT
  • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அழைப்பு
  • நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் மே தின விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது.

கன்னியாகுமரி:

அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் மே தின விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜி.சுகுமாரன் தலைமை தாங்குகிறார். 25-வது வார்டு கவுன்சிலர் எஸ்.அக்சயா கண்ணன் வ ரவேற்று பேசுகிறார்.

கூட்டத்தில் நான் (தள வாய் சுந்தரம் எம்.எல்.ஏ.), அ.தி.மு.க. மகளிர் அணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ராஜலெட்சுமி, அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.பச்சைமால், தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி முருகேசன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஆர்.கிருஷ்ணதாஸ், வக்கீல் பிரிவு துணை செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட இணை செயலாளர் இ.சாந்தினி பகவதியப்பன், மாவட்ட பொருளாளர் ஆர்.ஜெ.கே.திலக், மாவட்ட துணை செயலாளர் எம்.பார்வதி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் எஸ்.மெர்லியன்ட் தாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

இந்த கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளு மாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News