உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியரை வெட்டிய சிறுவன் உள்பட 3 பேர் கைது

Published On 2023-06-02 11:41 GMT   |   Update On 2023-06-02 11:41 GMT
  • மேலும் 2 பேர் தலைமறைவு
  • 5 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் அரவிந்தை சரமாரியாக தாக்கியது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ள சுவாமிநாதபுரத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 32).

இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றினார். இந்த நிலையில் வெளிநாட்டுக்கு மண்ணுளி பாம்பு கடத்தல் வழக்கில் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் அரவிந்த் வீட்டில் இருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் அரவிந்தை சரமாரியாக தாக்கியது. மேலும் அரிவாளாலும் வெட்டியது.

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. படுகாயம் அடைந்த அரவிந்தை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவி லில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை தொடர் பாக இந்த தாக்குதல் சம்ப வம் நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தக்கலை அப்பட்டுவிளையை சேர்ந்த எபனேசர் (19) கன்னியா குமரியை சேர்ந்த விஜி என்ற விஜயகுமார் (35) மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் விசா ரணை நடத்தப்பட்டு வரு கிறது. 3 பேரையும் போலீ சார் கோர்ட்டில் ஆஜர்ப டுத்தினர். தலைமறைவாகியுள்ள 2 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News