உள்ளூர் செய்திகள்

இரணியலில் இருந்து இங்கிலாந்தில் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்ற பெண் மாயம் - டெல்லியில் தவிப்பதாக கணவர் போலீசில் புகார்

Published On 2023-03-16 07:05 GMT   |   Update On 2023-03-16 07:05 GMT
  • இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் வாட்ஸ் அப் மூலம் பழக்கம் ஏற்பட்டது
  • உஷா பிள்ளையின் மகள் தாயாரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். சுவிட்ச் ஆப் ஆகி விட்டது

கன்னியாகுமரி:

இரணியல் அருகே உள்ள பரசேரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் நாகம்பிள்ளை (வயது 57). களியங்காட்டில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி உஷாபிள்ளை (50). இவருக்கும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவ ருக்கும் வாட்ஸ் அப் மூலம் பழக்கம் ஏற்பட்டது.அந்த நபர் உஷா பிள்ளைக்கு லண்டனில் நல்ல வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியதாக தெரிகிறது.

இதனை நம்பிய உஷாபிள்ளை யாரிடமும் சொல்லாமல் நேற்று முன்தினம் லண்டன் செல்ல விமான நிலையம் சென்றுள்ளார். அதன்பின்பு அவரை காணவில்லை.

இதனால் பதறி போன உஷா பிள்ளையின் கணவர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தார். அப்போது நேற்று காலை 9.30 மணி அளவில் செல்போனில் உஷாபிள்ளை கணவரை தொடர்பு கொண்டார்.

அப்போது அவர் டெல்லி விமான நிலையத்தில் இருப்பதாக கூறி உள்ளார். அதன் பின்னர் உஷாபிள்ளை மகளின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் ஒரு பெண் பேசியுள்ளார்.

அந்த பெண், டெல்லி ஏர்போர்ட்டில் இருந்து பேசுகிறோம். உங்கள் தாயார் நாங்கள் கூறியது போல் ரூ.1 லட்சம் பணம் கொண்டு வரவில்லை. அவர்கள் பணம் கட்ட வில்லை என்றால் அவர்களை வேறு நாட்டிற்கு அனுப்பி வைத்து விடுவோம் என கூறியுள்ளார்.

உடனே உஷா பிள்ளையின் மகள் தாயாரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி விட்டது. இதுகுறித்து நாகம் பிள்ளை கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News