உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை

Published On 2023-09-11 07:10 GMT   |   Update On 2023-09-11 07:10 GMT
  • மாணவ-மாணவிகள் குடைபிடித்து சென்றனர்
  • பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலகம் செல்வோர் பாதிக்கப்பட்டனர்.

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக காலை நேரங்களில் சாரல் மழை பெய்வதால் ரம்யமான சூழல் நிலவி வருகிறது. பகல் நேரங்களிலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.

இன்று காலையும் மாவட்டத்தின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இந்த நிலையில் நாகர்கோவில், சாமிதோப்பு, சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 7 மணி முதல் விட்டு விட்டு மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை நீடித்தே வந்தது.

அதேநேரம் களியக்காவிளை, நித்திரவிளை, களியல், கடையால் மற்றும் மலையோரப் பகுதிகளில் ஓரளவு மிதமான மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலகம் செல்வோர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மழையின் நனைந்த படியே சென்றனர். சிலர் குடை பிடித்தபடி சென்றனர்.

மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு 471 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 181 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

Tags:    

Similar News