உள்ளூர் செய்திகள்

நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் - கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

Published On 2023-04-20 06:37 GMT   |   Update On 2023-04-20 06:37 GMT
  • 17 வகையான ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்
  • கிராம நிர்வாக அலுவலரால் அளிக்கப்பட்டுள்ள அடையாள சான்றுகள் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

நாகர்கோவில், ஏப்.20-

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டம் கோதை யாறு வடிநில கோட்டத்தில் அமைந்துள்ள 46 நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் பதவிகளில் 8 தலைவர் பதவி மற்றும் 7 ஆட்சி மண்டல தொகுதி உறுப்பி னர்களின் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி நடை பெறவுள்ளது.

வாக்குப்பதிவு தினத் தன்று வாக்காளர்கள் உரிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்குப் பதிவு மையத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும். இந்திய தேர்தல் ஆணை யத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வருமான வரி அடையாள அட்டை, பணி அடையாள அட்டைகள் - மாநில, மைய அரசு (அல்லது) அரசு சார்பொது நிறுவனங்கள் (அல்லது) உள்ளாட்சி அமைப்புகள் (அல்லது) தனியார் நிறுவனங்கள் பணியாளர்களுக்கு வழங்கியுள்ள பணியாளர் அடையாள அட்டை, வங்கி, உழவர், அஞ்சல் நிலைய பற்று வரவு புத்தகம், தற்போது பயன்படுத்தி வரும் குடும்ப அட்டை, மாணவர் அடையாள அட்டை, சொத்து ஆவணங்கள், பட்டா மற்றும் பதிவு செய்யப்பட்ட பத்திரம் முதலியவை, படை கலம் உரிமம், நடத்துனர் உரிமம் (உரிய அதிகாரம் பெற்ற அலுவலரால் வழங்கப்பட்டது), ஓய்வூதிய ஆவணம், அதாவது முன்னாள் படை வீரர் ஓய்வூதிய புத்தகம், ஓய்வூதியம் வழங்கிய ஆவணம் போன்றவை, முன்னாள் படை வீரர்களின் விதவைகள், சார்ந்தோர் சான்றுகள், ரெயில், பேருந்து பயண அடையாள அட்டை, உடல் ஊனமுற்றோருக்கான சான்று, சுதந்திர போராட்ட வீரரின் அடையாள அட்டை, கிராம நிர்வாக அலுவலரால் அளிக்கப்பட்டுள்ள அடையாள சான்றுகள் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்பட்டுள்ள சான்றுகள் வாக்காளர்களின் புகைப்படத்துடன் கூடியதாகவும் மற்றும் வாக்காளரை சார்ந்த கீழ்க்கண்ட விவரங்களை தெரிவிப்ப தாகவும் இருக்க வேண்டும்.

வாக்காளரின் பெயர், வாக்காளரின் வயது, தந்தையின் பெயர், விலாசம், வாக்காளர் பட்டியலில் வரிசை மற்றும் பகுதி எண் இடம் பெற்றிருக்க வேண்டும். நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலுக்கு வாக்களிக்க வருபவர்கள் புகைப்பட அடையாள அட்டையுடன் தங்கள் நில உரிமையாக காட்டும் ஆவணங்களையும் எடுத்துவர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News