உள்ளூர் செய்திகள்
பளுகல் அருகே இருசக்கர வாகனம் திருட்டு
- பளுகல் அருகே உள்ள மேல்பாலை பகுதியை சேர்ந்தவர் ஜெயசுந்தர் லால், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி
- போலீசார் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாக னத்தை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி :
பளுகல் அருகே உள்ள மேல்பாலை பகுதியை சேர்ந்தவர் ஜெயசுந்தர் லால், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவர் தனது இரு சக்கர வாகனத்தை பூவன்கோடு பகுதியில் நிறுத்தி விட்டு பால் வெட்ட சென்றுள்ளார்.
வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்த போது இரு சக்கர வாகனத்தை காணவில்லை. இது குறித்து பளுகல்போலீஸ் நிலையத்தில் ஜெயசுந்தர் லால் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாக னத்தை தேடி வருகின்றனர்.