கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
- கடற்கரை ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது
- தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ஜவுளி கடைகளுக்கு மக்கள் படை எடுப்பு
கன்னியாகுமரி :
சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் இங்கு சுற்றுலா பயணிகள் மட்டு மின்றி அய்யப்ப பக்தர்க ளின் வருகையும் அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாத காலமும் கன்னியாகுமரியில் மெயின் சீசன் காலமாக கருதப்படுகிறது.
அதேபோல் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடு முறை சீசனை யொட்டியும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்ப டும். கன்னியாகுமரியில் இந்த 2 சீசன் காலங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிக அளவில் காணப்ப டும். சீசன் இல்லாத காலங்க ளில் வாரத்தின் கடைசி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் தொடர் விடுமுறை நாட்க ளிலும் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதிய வண்ணமாக இருக்கின்றன.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்ப தால் மக்கள் ஜவுளி கடை களுக்கு துணி எடுப்பதற்காக படை எடுக்க தொடங்கி விட்டனர். இதனால் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைய தொடங்கிவிட்டது. வாரத்தின் கடைசி விடு முறை நாட்களான கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட சுற்றுலா பயணிகளின் வருகை குறை வாகவே காணப்பட்டது.
அதிலும் குறிப்பாக வாரத்தின் முதல் நாளான இன்று பள்ளி மற்றும் அலுவலகங்கள் செயல்பட தொடங்கியதை தொடர்ந்து இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அடியோடு நின்று போய்விட்டது. வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகளின் வருகையும் மட்டுமின்றி உள்ளூர் சுற்றுலா பயணிகளின் வருகையும் இன்று கணி சமான அளவு குறைந்துவிட்டது.
தீபாவளி முடியும் வரை கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைய வாய்ப்பு உள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை குறைய தொடங்கியதால் சுற்றுலா தலமான கன்னியா குமரி கடற்கரை பகுதி சுற்றுலா பயணிகள் நட மாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்ப டுகிறது. கன்னியாகுமரி பகுதியில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி கிடக்கின்றன. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடேஸ்வரசுவாமி கோவில், சுசீந்திரம் தாணு மாலய சாமி கோவில் போன்ற பெரிய கோவில்க ளிலும் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.
சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் கன்னியாகுமரியில் உள்ள கடை மற்றும் ஓட்டல்களில் வியாபாரம் இன்றி வியாபாரிகள் மிகவும் கவலையடைந்து உள்ளனர்.