உள்ளூர் செய்திகள்
ஆரல்வாய்மொழி அருகே வீட்டில் இருந்த பெண் மாயம்
- ஆரல்வாய்மொழி போலீசில் புகார்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
ஆரல்வாய்மொழி அருகே தாழக்குடி மீன மங்களம் காலனியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி மணிக்கலா (வயது 46). நேற்று பாபு காலையில் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். மாலையில் வீட்டிற்கு வந்தபோது வீட்டில் மனைவி மணிகலா இல்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங் களில் தேடினார்.ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து பாபு ஆரல்வாய்மொழி போலீ சில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மணிகலாவை தேடி வருகிறார்கள்.