உள்ளூர் செய்திகள்

பூதப்பாண்டியில் தற்கொலை செய்த புதுப்பெண் பதிவு செய்த ஆடியோவால் பரபரப்பு - போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை

Published On 2022-08-01 13:51 IST   |   Update On 2022-08-01 13:51:00 IST
  • திருமணத்துக்கு பிறகு மனோஜின் உறவினர்கள் அபிராமிக்கு சிறு சிறு தொந்தரவுகளை செய்து வந்ததாக தெரிகிறது
  • திருமணமாகி 4 மாதங்களே ஆனதால் நாகர்கோவில் ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டார்

நாகர்கோவில் :

நாகர்கோவில் வடசேரி அறுகுவிளையை சேர்ந்தவர் வினு. இவரது மகள் அபிராமி. இவருக்கும் பூதப்பாண்டி அருகே ஞாலம் காலணியை சேர்ந்த மனோஜ் என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பிறகு மனோஜின் உறவினர்கள் அபிராமிக்கு சிறு சிறு தொந்தரவுகளை செய்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அபிராமி தனது தந்தை வினுவிடம் கூறியுள்ளார். வினு மகளை சமாதானப் படுத்தி வந்தார்.

இந்த நிலையில் அபிராமி திடீரென அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அபிராமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 4 மாதங்களே ஆனதால் நாகர்கோவில் ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டார். அபிராமியின் கணவர் மனோஜ் மற்றும் அவரது தாயாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அபிராமி தற்கொலை செய்வதற்கு முன்னர் செல்போனில் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து ஆடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த ஆடியோவை போலீசார் கைப்பற்றி யுள்ளனர். அதை முக்கிய சாட்சியமாக வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News