உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் 16-வது வார்டில் 13 தெருக்களில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு

Published On 2023-11-20 08:18 GMT   |   Update On 2023-11-20 08:18 GMT
  • சுமார் 13 தெருக்களில் 800-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன
  • 16-வது வார்டு கவுன்சிலருமான ஜவகர் புதிய மின்மோட்டார் பொருத்த நடவடிக்கை மேற்கொண்டார்.

நாகர்கோவில் :

நாகர்கோவில் மாநகராட்சி 16-வது வார்டு ஜோதி தெரு மற்றும் அதை சுற்றி சுமார் 13 தெருக்களில் 800-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதிக்கு ஜோதி தெரு சந்திப்பில் அமைந்துள்ள ஆழ்துளை கிணறு மூலமே குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இதற்கான மோட்டார் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது. அடிக்கடி செயல்படாத நிலை இருந்ததால் புதிய மின்மோட்டார் பொருத்த வேண்டும் என்று மாநகராட்சிக்கு அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுதொடர்பாக மண்டல தலைவரும், 16-வது வார்டு கவுன்சிலருமான ஜவகர் புதிய மின்மோட்டார் பொருத்த நடவடிக்கை மேற்கொண்டார்.

அதன்பேரில் தற்போது புதிய மின்மோட்டார் பொருத்தப்பட்டு ஜோதி தெரு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தெருக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள 13 தெருக்களில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய மின்மோட்டார் பொருத்த நடவடிக்கை மேற்கொண்ட மாநகராட்சி மேயர் மகேஷ், மண்டல தலைவர் ஜவகர் மற்றும் அதிகாரிகளுக்கு அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News