உள்ளூர் செய்திகள்

கோட்டாரில் 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Published On 2022-06-21 09:19 GMT   |   Update On 2022-06-21 09:19 GMT
  • குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.
  • குடோன் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்த கலெக்டர் அரவிந்த் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று கோட்டார் பஜார் பகுதியில் பிளாஸ்டிக் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் தலைமையில் நகர்நல அதிகாரி விஜய் சந்திரன், சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் ஆகியோர் ஒரு கடையில் சோதனை நடத்தினர்.

கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்திய போது பக்கத்தில் உள்ள குடோனில் பிளாஸ்டிக் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

அங்கு சோதனை செய்த அதிகாரிகள் 4 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.

குடோன் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தான் கோட்டாறு பகுதியில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News