உள்ளூர் செய்திகள்

மார்த்தாண்டம் அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் கைது

Published On 2023-02-16 14:32 IST   |   Update On 2023-02-16 14:32:00 IST
  • சில மாதங்களுக்கு முன்பு கேரளா மாநிலம் பாறசாலையில் உள்ள ஒரு வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
  • பாறசாலையில் உள்ள குற்றவாளிக்கும் முகமது பயசுக்கும் ஜெயிலில் வைத்து பழக்கம்

கன்னியாகுமரி :

மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மருதன்கோடு பகுதியில் கடந்த ஆண், பெண் ஒருவரின் கழுத்தில் கிடந்த 3-பவுன் தாலி செயினை மோட்டார் சைக்கிளில் சென்ற 2 மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

இதுகுறித்து போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளா மாநிலம் பாறசாலையில் உள்ள ஒரு வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் முதல் குற்றவாளியான சென்னை குளத்தூர் தணிகாசலம் முதல் தெருவை சேர்ந்த முகமது பயஸ் (வயது 38) என்பவரை கைது செய்ய தனிப்படை பல்வேறு முயற்சிகளை மேற்கொ ண்டது. ஆனால் முகமது பயஸ் போலீசாரிடம் சிக்காமல் தப்பித்துக் கொண்டே இருந்தார். இந்நிலையில் தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமை யிலான போலீசார், சென்னையில் மறைந்திருந்த முகமது பயசை அதிரடியாக கைது செய்து குமரி மாவட்டம் கொண்டு வந்து விசாரணை நடத்தினார். அதில் பாறசாலையில் உள்ள குற்றவாளிக்கும் முகமது பயசுக்கும் ஜெயிலில் வைத்து பழக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவி த்துள்ளார்.

Tags:    

Similar News