உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரே மாற்று திறனாளி வாலிபர் விடிய விடிய போராட்டம்

Published On 2022-08-16 06:47 GMT   |   Update On 2022-08-16 06:47 GMT
  • போராட்டம் இன்று 2-வது நாளாக நீடிப்பு
  • மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு எந்த சலுகைகளும் செய்யவில்லை

நாகர்கோவில்:

பூதப்பாண்டி அருகே தாழக்குடி வீரநாராயண மங்கலம் பகுதியை சேர்ந்தவர் வள்ளிநாயகம் (வயது 39 )ஆட்டோ டிரைவர்.இவர் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி.

இவர் தனது சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்க வேண்டும். அனைத்து அலுவலகங்களுக்கும் செல்ல சாய்வு தளம் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்புக்கொடியுடன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தகவல் வெளியானது.

இதையடுத்து வள்ளிநா யகம் வீட்டிற்கு சென்ற ஆரல்வாய்மொழி போலீசார் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி னார்கள். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து வள்ளி நாயகத்தை ஆரல்வா ய்மொழி போலீஸ் நிலைய த்திற்கு அழைத்து சென்றனர்.பின்னர் அவர் மாலையில் விடுவிக்கப்பட்டார்.

போலீசாரால் விடுவி க்கப்பட்ட பிறகு அவர் அங்கிருந்து நேராக நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

கலெக்டர் அலுவலக த்திற்கு வந்த வள்ளிநாயகம் கையில் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.இதையடுத்து நேசமணி நகர் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அவர் கருப்பு கொடியுடன் ஆட்டோவில் புறப்பட தயாரானார்.

அப்போது திடீரென போலீசாருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து வள்ளி நாயகம் கலெக்டர் அலுவலகத்தின் எதிர்புறம் தனது போராட்டத்தை தொடர்ந்தார்.விடிய விடிய அவர் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலையிலும் தொடர்ந்து வள்ளிநாயகம் போராட்டத்தில் ஈடுப ட்டுள்ளார். இதுகுறித்து வள்ளிநாயகம் கூறுகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு எந்த சலுகை களும் செய்யவில்லை இது தொடர்பாக நான் போராடி வருகிறேன் என்றார்.

Tags:    

Similar News