உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 100-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2023-06-20 08:02 GMT   |   Update On 2023-06-20 08:02 GMT
  • சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.
  • ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் பேரூராட்சி மற்றும் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி, ஜூன்.20-

கன்னியாகுமரியில் மெயின் ரோட்டில் இருபுறமும் ஏராளமான கடைகள், ஓட்டல்கள் மற்றும் தங்கும்விடுதிகள் உள்ளன. இந்த வணிக நிறுவனங்களின் முன்பு சிலர் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைத்து உள்ளனர். இதனால் நடைபாதையில் நடந்து செல்லும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

இதைத்தொடர்ந்து குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை நடந்தது. கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் தலைமையில் பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன் சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஸ் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். கடைகளில் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள்ராட்சதஜே.சி.பி. பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவியது. கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் பலத்து போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News