உள்ளூர் செய்திகள்

சமூக வலைத்தளங்களில் முதல்-அமைச்சர் பற்றி அவதூறு கருத்து பதிவிட்ட வாலிபர் கைது

Published On 2022-08-24 13:39 IST   |   Update On 2022-08-24 13:39:00 IST
  • புகாரின் பேரில் தென் தாமரைகுளம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
  • அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

நாகர்கோவில்:

அகஸ்தீஸ்வரம் அருகே எழுசாட்டு பத்து பகுதியைச் சேர்ந்தவர் ஜெமீன் (வயது 33).

இவர், குதிரை வளர்த்து வருகிறார். அதனை கொண்டு கன்னியாகுமரியில் கடற்கரைக்கு வரும் பயணிகளை சவாரிக்கு அழைத்து செல்வார்.

கடந்த சில நாட்களாக இவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டார்.

சமூக வலைதளங்களில் இதனை பார்த்த தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரைபாரதி, தென்தாமரைகுளம் போலீ சில் இதுபற்றி புகார் செய்தார்.

அதில், முதல்-அமைச்சர் பெயருக்கு களங்கத்தையும், நன்மதிப்பை குலைக்கும் வகையில் கருத்து பதிவிட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

புகாரின் பேரில் தென் தாமரைகுளம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஜெமீன் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.இந்த நிலையில் நேற்று இரவு ஜெமீன் கைது செய்யப்பட்டார்.

அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News