உள்ளூர் செய்திகள்

மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் 5000 பேர் பங்கேற்க வேண்டும்

Published On 2023-08-14 06:49 GMT   |   Update On 2023-08-14 06:49 GMT
  • குமரி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
  • தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொய்யான தகவலை பரப்பி வருவதற்கு வன்மையாக கண்டிப்ப

கன்னியாகுமரி :

மதுரையில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க.வின் எழுச்சி மாநாடு சம்பந்தமாக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சாங்கையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அணி செயலாளர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சிவகுற்றாலம், இணை செயலாளர் மேரி கமலபாய், துணை செயலாளர் அல்போன்சாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சலாம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.கலந்துகொண்டார்.

கூட்டத்தில் வருகிற 20-ந்தேதி மதுரையில் நடை பெறும் கழக பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி வாரியாக அதி கமான வாகனங்களில் சுமார் 5000-க்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொள்வது. 1989-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை அவமானப்படுத்தி தாக்கிய சம்பவம் குறித்து இப்போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொய்யான தகவலை பரப்பி வருவதற்கு வன்மையாக கண்டிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஜீன்ஸ், மணி, ஜெயசுதர்சன், குழித்துறை நகர செயலாளர் அழகராஜ், அணி செயலாளர்கள் வழக்கறிஞர் அருள் பிரகாஷ் சிங், ரெஞ்சித்குமார், யூஜின், மனோ, காசிராஜன், ஜாண், மகாஜி செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் சக்கீர் உசேன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சில்வெஸ்டார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News