உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரி அருகே உல்லாச பூங்காவில் இரும்பு பொருட்கள் கொள்ளை
- கொரோனா பிரச்சினையின் போது மூடப்பட்ட பூங்கா இதுவரை திறக்கப்படவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே கோவளம் பகுதியில் பேவாட்ச் எனப்படும் உல்லாச நீர் வீழ்ச்சி பூங்கா உள்ளது. கொரோனா பிரச்சினையின் போது மூடப்பட்ட பூங்கா இதுவரை திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் அந்த பூங்காவில் இருந்த இரும்பு பொருட்கள் மற்றும் என்ஜின் ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இது பற்றி பூங்கா காவலாளி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.