நாகர்கோவில் நியூ ஜனதா புட்வேர் 7-ம் ஆண்டு தொடக்க விழா
- 5 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது
- ஆடி மாத சிறப்பு விற்பனைக்காக அதிகமான அளவில் புதுவகை காலணிகள் வந்துள்ளது.
நாகர்கோவில் :
நாகர்கோவிலில் நியூ ஜனதா புட்வேர் 7-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இது தற்போது புதுப்பொலிவுடன் புது நிர்வாகத்தில் இயங்கி வருகிறது. இதையடுத்து அவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் நியூ ஜனதா உரிமையாளர் கமல் நாசர் கூறியதாவது:-
நியூ ஜனதா புட்வேரில் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் 5 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ஆடி மாத சிறப்பு விற்பனைக்காக அதிகமான அளவில் புதுவகை காலணிகள் வந்துள்ளது.
எங்களிடம் முன்னணி நிறுவனங்களின் காலணிகள் வுட்லேண்ட், பக்காரு, அடிடாஸ், பூமா, லீகூப்பர் மற்றும் விகேசி, வாக்கரூ, பாராகான் உள்ளிட்ட ஏராளமான காலணிகள் அத்துடன் பள்ளி ஷுஸ், சாக்ஸ், முன்னணி நிறுவனங்களின் பள்ளி மற்றும் கல்லூரி பேக், டிராலிகள், பெல்ட், கேப், ரெயின்கோட், சன்கிளாஸ், மூட்டு வலி, கால் வலி உள்ளவர்கள் பயன்படுத்தும் காலணிகளும், மணப்பெண் களுக்கு தேவையான பேன்சி வகை காலணிகளும் சிறந்த தரத்தில் குறைந்த விலையில் கிடைக்கும்.
அனுபவம் வாய்ந்த விற்பனையாளர்கள் கொண்டு எங்கள் புட்வேர் இயங்கி வருகிறது. எங்களின் வாடிக்கையாளர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் கிளைகளானது குழித்துறை மற்றும் குளச்சலில் இயங்கி வரு கிறது. நாங்கள் மேலும் வளர உங்களது வருகையை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.