அலுவலர்கள் வேலை நிறுத்தத்தால் ஊரக வளர்ச்சி அலுவலகம் வெறிச்சோடி காணப்படுவதை படத்தில் காணலாம்.
குமரி மாவட்டத்தில் அரசு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்
- அலுவலகங்கள் வெறிச்சோடியது
- கோரிக்கைகள் நிறை வேற்றப்படாவிட்டால் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு
நாகர்கோவில்:
ஊரக வளர்ச்சித்துறை யில் ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலமாக ஊதியம் வழங்க வேண்டும், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்கள் உட்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்றும், நாளையும் சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்த னர். அதன்படி இன்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக ஊராட்சித்துறை அலுவலர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலகப் பணிகள் அனைத்தும் முற்றிலுமாக முடங்கியது. இதே போல் அகஸ்தீஸ்வரம், கல்குளம், தோவாளை உட்பட ஒன்பது ஒன்றிய அலுவலகங்களிலும் ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை.
கோரிக்கைகள் நிறை வேற்றப்படாவிட்டால் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் காலை முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரி வித்துள்ளனர்.