உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் விதைகளை பரிசோதனை செய்து விவசாயிகள் முளைப்புதிறன் தெரிந்துகொள்ளலாம்

Published On 2023-08-26 12:16 IST   |   Update On 2023-08-26 12:16:00 IST
  • மூத்த வேளாண்மை அலுவலர் தகவல்
  • விதை உறையின் நச்சுதன்மை காரணமாக நீர் உட்புக இயலாத காரணத்தினால் முளைவிடாமல் இருக்கும்.

நாகர்கோவில் :

நாகர்கோவில் விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

நாகர்கோவில் விதை பரிசோதனை நிலையத்தில் ஒவ்வொரு பயிருக்கும் முளைப்புதிறன் பரி சோதனை மேற்கொள்ளப்ப டுகிறது. முளைப்புத்திறன் என்பது விதையின் உயிரும், வீரியமும் கொண்டு இயங்கு வதை காட்டுவது ஆகும். நல்ல முளைப்புதிறன் கொண்ட விதை குவியல்க ளிலிருந்து விதைக்கப்படும் விதை மூலம் அதிக பயர் எண்ணிக்கையில் பயிர்கள் வயலில் செழித்து வளரும். ஆனால் முளைப்புதிறன் குறைந்த விதைகளை பயன்படுத்தினால் குறைந்த அளவிலேயே பயிர்கள் வளரும். அதனால் பயிர் மகசூல் பாதிக்கப்படும்.

விதைச்சட்டம் 1966 பிரிவு 7 (பி)-ன்படி ஒவ்வொரு பயிருக்கும் குறைந்தபட்ச முளைப்புதிறன் தரம் நிர்ணயம் செய்து அறிவிக்கப் பட்டுள்ளது. நெல், எள், கொள்ளு 80 சதவீதம், மக்காச்சோளம் 90 சதவீதம், சோளம், கம்பு, கேப்பை, பயறு வகைகள் 75 சதவீதம், நிலக்கடலை, சூரியகாந்தி 70 சதவீதம், பருத்தி 65 சதவீதம், மிளகாய் 60 சதவீதம் ஆகும்.

பயிர்களுக்கு ஏதுவான சூழ்நிலையில் விதைகள் ஒரு முளையிட்டு பின்னா வளர்ச்சிக்கு அத்தியாவசி யமான பாகங்கள் உருவாகி இயல்பான செடியாவதற்குரிய திறனே முளைப்புதிறன் ஆகும். முளைப்புதிறன் சோதனையின்போது இயல்பானது. இயல்பற்றது. கடினமானது. உயிரற்றது என 4 வகைப்படுத்தி சோதனை முடிவுகள் அறிவிக்கப்படும். அவற்றின் கடின விதை என்பது விதை உறையின் நச்சுதன்மை காரணமாக நீர் உட்புக இயலாத காரணத்தினால் முளைவிடாமல் இருக்கும்.

பயறு விதைகள் மற்றும் வெண்டை விதைகளில் இவை தனியாக எடுத்து கணக்கிடப்படும். இவைகள் வயல்களில் முளைப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளதால் முளைப்புதிறன் கணக்கி டும்போது இயல்பான விதைகளுடன் சேர்த்துக் கணக்கிடப்படும்.

இந்த முறைகளின்படி முளைப்புதிறன் பரி சோதனைகள் மேற் கொள்ளப்பட்டு குறிப்பிட்ட கால அளவுகளில் பயிர்க ளின் முளைப்புதிறன் கணக்கி டப்பட்டு சோதனை முடிவுகள் அறிவிக்கப்படும். எனவே விவசாயிகள் தங்கள் சொந்த விதைகளை விதைக்கும்போது தங்களின் விதைகளின் முளைப்புதிறன் அறிந்து விதைத்திட தங்கள் விதைக்குவியலில் மாதிரி ஒன்று எடுத்து அதில் பயிர், ரகம் மற்றும் தேவைப்படும் பரிசோதனை விவரம் எழுதி விதை கட்டணமாக ரூ.80 செலுத்தி நாகர்கோவில் விதைப்பரிசோதனை நிலை ளளளளளயத்தில் விதை களின் முளைப்புதிறன் தெரிந்து விதைக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News