உள்ளூர் செய்திகள்
கரியமாணிக்கப்புரத்தில் விநாயகர் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை
- இரவு பூஜை முடிந்து பூஜாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.
- கோவிலுக்கு வந்தபோது கோவில் கருவறையில் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது
நாகர்கோவில் :
நாகர்கோவில் அருகே கரியமாணிக்கபுரத்தில் ஸ்ரீகன்னி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரவு பூஜை முடிந்து பூஜாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.
நேற்று கோவிலுக்கு வந்தபோது கோவில் கருவறையில் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்த உண்டியலையும் உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தனர். இதுகுறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து பாப்பு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.