உள்ளூர் செய்திகள்

நெல்லை மண்டல தமிழ்நாடு கிராம வங்கி சார்பில் கன்னியாகுமரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டபோது எடுத்த படம் 

கன்னியாகுமரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2022-11-07 08:09 GMT   |   Update On 2022-11-07 08:09 GMT
  • ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரம் கடந்த மாதம் 31-ந் தேதி முதல் நேற்று வரை கடைபிடிக்கப்பட்டது.
  • ஊழல் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியா முழுவதும் ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரம் கடந்த மாதம் 31-ந் தேதி முதல் நேற்று வரை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை மண்டல தமிழ்நாடு கிராம வங்கி சார்பில் கன்னியாகுமரியில் ஊழல் தடுப்புவிழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியை கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரியில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி கடற்கரை சாலை வழியாக கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரையில் சென்று நிறைவடைந்தது. அங்கு ஊழல் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்தநிகழ்ச்சிக்கு நெல்லை மண்டல உதவி பொதுமேலாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார்.இதில்வங்கி அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் சுற்றுலா காவலர்கள் திரளாக கலந்து கொண்டு ஊழல் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags:    

Similar News