உள்ளூர் செய்திகள்

களியக்காவிளையில் அண்ணாமலை நாளை நடைபயணம்

Published On 2023-08-14 13:24 IST   |   Update On 2023-08-14 13:24:00 IST
  • இன்று இரவு கன்னியாகுமரி வருகிறார்
  • அண்ணாமலை, குமரி மாவட்டத்தில் 3 நாட்கள் மக்களை சந்திக்கிறார்

நாகர்கோவில் :

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைப யணம் சென்று மக்களை சந்தித்து வருகிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பயணத்தை தொட ங்கிய அவர், பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று வருகிறார்.

இந்த பயணத்தில் அண்ணாமலை, குமரி மாவட்டத்தில் 3 நாட்கள் மக்களை சந்திக்கிறார். இதற்காக அவர் இன்று (திங்கட்கிழமை) இரவு கன்னியாகுமரி வருகிறார். அங்குள்ள தனியார் ஓட்டலில் அவர் தங்குகிறார்.

தொடர்ந்து நாளை (15-ந்தேதி) விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ட்டபட்ட களியக்கா விளை யில் இருந்து அண்ணாமலை நடைபய ணத்தை தொடங்கு கிறார். காலை 8 மணிக்கு பயண த்தை தொடங்கும் அவர், மதியம் குழித்து றையில் பேசுகிறார். மேலும் அந்த பகுதியில் உள்ள சமூக தலைவர்கள், முக்கிய பிரமுகர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார். மாலை 4 மணிக்கு வெட்டுமணியில் இருந்து நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை, இரவில் இரவிபுதூர்கடை வரை செல்கிறார். அங்கு நடைபெறும் கூட்டத்தில் அவர் பேசுகிறார். 17-ந்தேதி காலை பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட சாமியார் மடத்தில் இருந்து நடைபயணம் தொடங்கும் அவர், மணலி சந்திப்பில் நிறைவு செய்கிறார். மாலை யில் தக்கலை சந்திப்பில் இருந்து நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை, வில்லுக்குறி சந்திப்பில் பயணத்தை முடிக்கிறார்.

மறுநாள் (18-ந்தேதி) நாகர்கோவில் தொகுதி க்குட்பட்ட பார்வதிபுரத்தில் இருந்து அவர் நடைபயணம் தொடங்குகிறார். வேப்பமூடு சந்திப்பு வரை செல்லும் அவர், அங்குள்ள காமராஜர் சிலை முன்பு பேசுகிறார். மாலையில் கன்னியாகும ரியில் அவர் நடைபயணம் சென்று மக்களை சந்திக்கி றார். மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபயணம் மூலம் மக்க ளை சந்திக்கும் அவருக்கு கட்சியினர் உற்சாக வர வேற்பு கொடுக்கின்றனர்.

Tags:    

Similar News