உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி குகநாதீஸ்வரர்

கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம்

Published On 2022-11-08 07:53 GMT   |   Update On 2022-11-08 07:53 GMT
  • 100 கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட அன்னத்தால் அபிஷேகம் நடந்தது
  • கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமிஅன்று மூலவரான குகநாதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் ஐப்பசி பவுர்ணமியான இன்று குகநாதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. இதையொட்டி இன்று காலையில் அபிஷேகமும் அதைத்தொடர்ந்து தீபாராதனையும்நடந்தது.பின்னர்எண்ணை, பால், பன்னீர், இளநீர், தயிர், தேன் சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம்மற்றும் புனிதநீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதன்பின்னர் மூலவரான குகநாதீஸ்வர ருக்கு100 கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட அன்னத்தால் அன்னாபிஷேகம் நடந்தது. மதியம் 12 மணிக்கு அலங்கார ஷோடஷ தீபாராதனையும் அதைத்தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News