உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர்

எடப்பாடி பழனிசாமி கைதை கண்டித்து நாகர்கோவிலில் இன்று அ.தி.மு.க.வினர் திடீர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-10-19 15:30 IST   |   Update On 2022-10-19 15:30:00 IST
  • திரளான நிர்வாகிகள் பங்கேற்பு
  • கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது‌.

நாகர்கோவில்:

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் அந்தஸ்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்படாததை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் சென்னையில் இன்று போராட்டம் நடந்தது .

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலை வரும் முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. அமைப்பு செயலாளர் பச்சைமால் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், ஒன்றிய செயலாளர் ஜெசிம், பொன்சுந்தர்நாத், ராஜ்குமார், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன்.

மாநகராட்சி கவுன்சி லர்கள் ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன், முன்னாள் நகர செயலாளர்கள் சந்துரு, சந்திரன், முன்னாள் கவுன் சிலர் சகாயராஜ், பகுதி செயலாளர்கள் முருகே ஸ்வரன், ஜெயகோபால், ஜெவின் விசு மற்றும் ஒன்றிய பொருளாளர் வெங்கடேஷ் நிர்வாகிகள் ராஜாராம், இரணியல் லட்சுமணன், வடிவை மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஒரு சிலர் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது‌.

Tags:    

Similar News