உள்ளூர் செய்திகள்

சுசீந்திரம் அருகே போலீஸ் ஏட்டை தாக்கிய 8 பேர் மீது கொலை முயற்சி வழக்கு

Published On 2023-07-31 12:09 IST   |   Update On 2023-07-31 12:09:00 IST
  • போலீஸ் ஏட்டு ரமேசை கம்பியால் தாக்கியதாக தெரிகிறது.
  • 8 பேர் மீது கொலை முயற்சி உள்பட 9 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாகர்கோவில் :

சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் சரவணன் தேரியை சேர்ந்த ரமேஷ் போலீஸ் ஏட்டாக பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று தெங்கம்புதூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலய திருவிழா பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்தார்.

அப்போது அங்கு சிலர் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை ரமேஷ் தட்டி கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் தெங்கம் புதூரை சேர்ந்த விஷ்ணு குமார் (வயது 40), போலீஸ் ஏட்டு ரமேசை கம்பியால் தாக்கியதாக தெரிகிறது. விஷ்ணுகுமாருக்கு ஆதர வாக ஒரு கும்பல், போலீஸ் ஏட்டு ரமேசை சரமாரியாக தாக்கியதுடன் அவரது செல்போனையும் சேதப் படுத்தி உள்ளது.

இது குறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். படு காயம் அடைந்த ரமேசை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ் பத்திரியில் அனுமதித்தினர்.

இது குறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் தெங்கம்புதூரை சேர்ந்த விஷ்னுகுமார், பணிக்கன் குடியிருப்பை சேர்ந்த சிவனேசன், கொழுந்தி ராஜா, சக்திவேல், ராஜவேல் (50), வடக்கு அஞ்சுகுடி யிருப்பை சேர்ந்த ராஜன் (35), பணிக்கன்குடி யிருப்பை சேர்ந்த சங்கர், தெங்கம்புதூரை சேர்ந்த நந்தினி ஆகிய 8 பேர் மீது கொலை முயற்சி உள்பட 9 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள னர்.

இந்தநிலையில் தெங்கம்புதூரை சேர்ந்த விஷ்ணு குமார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை போலீசார் கைது செய்ததுடன் அவர் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தலைமறைவாகியுள்ள 7 பேரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள். போலீசார் தேடுவதை அறிந்த அவர் கள் தலைமறைவாகி விட்டனர். இந்த நிலையில் 3 பேர் போலீசில் சிக்கி உள்ளனர்.

Tags:    

Similar News