உள்ளூர் செய்திகள்
கொல்லங்கோடு அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் மீது வழக்கு
- கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
- சாஜி மீது போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
குளச்சல் :
கொல்லங்கோடு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சாஜி (வயது 33). இவர் அப்பகுதியில் கேன் குடிநீர் விநியோகம் செய்யும் ஒரு டெம்போவில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த பெண்ணின் சகோதரி மகள் அப்பகுதியில் ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி நேற்று வீட்டில் அழுது கொண்டிருந்தார். சிறுமியின் தாயார் கேட்டதற்கு சாஜி தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறினார்.
இதுகுறித்து குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சாஜி மீது போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.