உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் 23 பேருக்கு கொரோனா
- நாகர்கோவில் பகுதியில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
- மாவட்டம் முழுவதும் 64 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாகர்கோவில் பகுதியில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
நேற்று ஒரே நாளில் 23 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 64 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 37 பேர் ஆண்கள், 27 பேர் பெண்கள் ஆவார்கள்.
கடந்த 6 மாதத்தில் மட்டும் இதுவரை 20,586 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.