உள்ளூர் செய்திகள்
இடலாக்குடி பகுதியில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
- சந்தேகப்படும்படியாக நின்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்
- கஞ்சா எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில் :
கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கு மார் தலைமையிலான போலீசார் சாஸ்திரி நகர் பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். போலீசார் அவர்களை சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த முகமது ஆசிப், மதன் என்பது தெரியவந்தது. இவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.