உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே விபத்தில் 2 பேர் சாவு - புதுமாப்பிள்ளை பலியானதால் உறவினர்கள் சோகம்

Published On 2022-08-13 08:50 GMT   |   Update On 2022-08-13 08:50 GMT
  • எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன
  • விபத்தில் பலியான பிரதீஷிற்கு வருகிற 1-ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது

கன்னியாகுமரி :

குலசேகரம் அருகே உள்ள பொன்மனை காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40). இவரும் பொன்மனை ஈஞ்சக்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜன் (34) என்பவரும் முள்வேலி அமைக்கும் பணி செய்து வருகின்றனர்.

நேற்று 2 பேரும் பணியை முடித்து விட்டு முட்டத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். இரணி யலில் இருந்து தக்கலை சாலையில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர் கோணம் ரெயில்வே மேம்பாலம் அருகில் வந்த போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. அந்த மோட்டார் சைக்கிளில் ஆத்திவிளையைச் சேர்ந்த பிரதீஷ் மற்றும் ரெஜு ஆகியோர் வந்தனர்.

இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் ராஜ சேகர் மற்றும் பிரதீஷ் (28) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் காயம டைந்த ராஜன் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவ மனையிலும் ரெஜூ சுங்கான் கடையில் உள்ள தனியார் மருத்துவ மனை யிலும் அனுமதிக்க ப்பட்ட னர். இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான பிரதீஷிற்கு வருகிற 1-ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவர் திருமணத்திற்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் சொந்தஊர் திரும்பி உள்ளார்.

திருமண பத்திரிக்கையை கொடுத்து வரும் போது தான் பிரதீஷ் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார். இதனால் திருமண வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் சோகத்தில் மூழ்கி உள்ளனர். மேலும் அந்த கிராமமே சோகத்தில் உள்ளது.

விபத்தில் பலியான ராஜசேகருக்கு மூன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. மேலும் அவரது மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News