உள்ளூர் செய்திகள்

குமரியில் தொண்டு நிறுவனம் பெயரில் போலி நன்கொடை வசூல் செய்த கர்நாடக வாலிபர்கள் 2 பேர் கைது

Published On 2022-11-03 12:40 IST   |   Update On 2022-11-03 12:40:00 IST
  • ‘நாங்கள் கோயம்புத்தூர் சிங்காரபாளையம் அன்பு மலர் உடல் ஊனமுற்றோர் சமூக நல வாழ்வு தொண்டு நிறுவனத்திலிருந்து வருகிறோம்’ நன்கொடை தருமாறு கேட்டனர்.
  • பொதுமக்களிடம் பிடி பட்ட கர்நாடகா வாலிபர்கள் நேற்று ரூ.2 ஆயிரம் வசூல் செய்திருந்தனர்

கன்னியாகுமரி :

குளச்சல் அருகே கீழ்கரை கணியான்விளையை சேர்ந்தவர் வேலாயுதன். இவரது மகன் விக்னேஷ் (32).எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று மதியம் இவர் வீட்டிலிருக்கும்போது 2 வாலிபர்கள் அவர் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் 'நாங்கள் கோயம்புத்தூர் சிங்காரபாளையம் அன்பு மலர் உடல் ஊனமுற்றோர் சமூக நல வாழ்வு தொண்டு நிறுவனத்திலிருந்து வருகிறோம்' நன்கொடை தருமாறு கேட்டனர். இவர்களது பேச்சில் சந்தேகமடைந்த விக்னேஷ், வாலிபர்கள் கையில் வைத்திருந்த நன்கொடை புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். அதில் இரு வாலிபர்களும் கோவை தொண்டு நிறுவனத்தின் ஊழியர்கள் இல்லை என தெரிய வந்தது. வாலிபர்கள் வைத்திருந்த நன் கொடை புத்தகம் போலியாக அவர் கள் அச்சிட்டு கொண்டு வந்தது தெரிய வந்தது.

இதற்கிடையே பொது மக்கள் அங்கு திரண்டனர்.பின்னர் விக்னேஷ் பொது மக்கள் உதவியுடன் 2 வாலிபர்களையும் குளச்சல் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசார ணையில் வாலிபர்கள் கர்நாடகா மாநிலம் பிஜப்பூர் குந்தவன் பகுதியை சேர்ந்த சச்சின் திலீப் ஜெகதாப் (24) மற்றும் பிஜப்பூர் மெலடியை சேர்ந்த பாரத் லெட்சுமணன் சவான் (26) என்பதும், இவர்கள் கடந்த 8 மாதமாக தோவாளை பகுதியில் கொட்டகை போட்டு தங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களிடமிருந்து போலியாக நன்கொடை வசூல் செய்தது தெரிய வந்தது.

பொதுமக்களிடம் பிடி பட்ட கர்நாடகா வாலிபர்கள் நேற்று ரூ.2 ஆயிரம் வசூல் செய்திருந்தனர். ரூ.2 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி இரு வாலிபர்கள் மீதும் இந்திய தண்டனை சட்டம் 420 உள்பட பிரிவு களில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தார். கைது செய்யப்பட்ட கர்நாடகா வாலிபர்கள் நேற்றிரவு இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Tags:    

Similar News