உள்ளூர் செய்திகள்

திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம் 

குடியரசு தினத்தையொட்டி கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

Published On 2023-01-24 12:32 IST   |   Update On 2023-01-24 12:32:00 IST
  • கடற்கரை பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு
  • படகு மூலமும் கடல் வழியாக போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள்.

கன்னியாகுமரி:

குடியரசு தினத்தை யொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. கடற்கரைப் பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

இந்தியாவின் 74-வது குடியரசு தினவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படு கிறது. இதை யொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டு உள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியா குமரி யிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி நகர பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கிஏந்திய போலீஸ் பாதுகாப்புபோடப் பட்டு உள்ளது.கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களிடம் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக் கப்படுகிறார்கள். மேலும் கன்னியாகுமரி ரெயில் நிலையம், பஸ் நிலையம், கலங்கரை விளக்கம், கடற்கரைப்பகுதி போன்ற முக்கியமான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஉள்ளது.

கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் குமரி மாவட்டத்தில் உள்ள 48கடற்கரை கிராமங்களி லும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். படகு மூலமும் கடல் வழியாக போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள். கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சொந்தமான சோதனை சாவடிகளில் இரவு பகலாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் தங்கி இருக்கி றார்களா? என்று போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News