உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் பாஜக ஓபிசி அணி மாவட்ட தலைவர் குமாரதாஸ் பேசிய போது எடுத்தப் படம்.

தக்கலை அருகே பாரதிய ஜனதாவினர் போலீசாருடன் வாக்குவாதம் - பரபரப்பு

Published On 2022-12-02 08:46 GMT   |   Update On 2022-12-02 08:46 GMT
  • தக்கலை - ராமன்பரம்பு சாலையை சீரமைக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்
  • உண்ணாவிரதம் இருக்கலாம் ஆனால் பந்தல் அனுமதி கிடையாது என தெரிவித்த போலீசாருடன் கடும் வாக்கு வாதம்

கன்னியாகுமரி:

தக்கலை அருகே உள்ள பத்மனாபபுரம் நகரட்சிக்குட்பட்ட 15-வது வார்டில் தக்கலை - ராமன்பரம்பு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் அவதிபட்டு வந்தனர், சாலையை சீரமைக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கவுன்சிலர் கீதா பலமுறை மனு கொடுத்தும் பலன் இல்லை.

இந்த நிலையில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி தக்கலை பஸ் நிலையம் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை பாரதிய ஜனதாவினர் பேராட்டத்திற்கு திரண்ட னர். உண்ணாவிரதம் இருப்பவர் வசதிக்காக பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் உண்ணாவிரதம் இருக்கலாம். ஆனால் பந்தல் அனுமதி கிடையாது என தெரிவித்தனர்.

இதற்கு பாரதிய ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் போலீசாருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பந்தலை அகற்ற பாரதிய ஜனதாவினர் மறுத்தனர். தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கவுன்சிலர் கீதா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் உன்னி கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்துக்கு பாஜக ஓபிசி அணி மாவட்ட தலைவர் குமாரதாஸ், மாவட்ட நிர்வாகிகள் குமரி ரமேஷ், டாக்டர் சுகுமாரன், ஷண்முகம், துளசிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News