உள்ளூர் செய்திகள்

பலியான மதன்சிங் தாகூர்

கன்னியாகுமரியில் கடலில் குளித்த சுற்றுலா பயணி மயங்கி விழுந்து சாவு

Published On 2023-01-08 07:38 GMT   |   Update On 2023-01-08 07:38 GMT
  • மனைவி கண் எதிரே பரிதாபம்
  • கன்னியா குமரி போலீசார் விசாரணை

கன்னியாகுமரி:

மத்தியபிரதேசம் மாநிலம் தார் திரியா பகுதியைச் சேர்ந்தவர் மதன்சிங் தாகூர் (வயது 72).

இவர் மனைவி நர்மதா தாகூர் உள்பட 120 பேருடன் 2 பஸ்களில் நேற்று மதியம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார் வையிட்டனர்.

அதன்பிறகு அவர்கள் கன்னியாகுமரியி ல் உள்ள சன்செட் பாயிண்ட் கடலில் குளித்துஉள்ளனர். அப்போது "திடீர்"என்று மதன்சிங் தாகூர் தனது மனைவி கண் எதிரே மயங்கி விழுந்து உள்ளார்.

இதைப் பார்த்து அவரது மனைவி மற்றும் அவருடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை அவரது உறவினர்கள் மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் கன்னியா குமரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று உள்ளனர். ஆனால் மதன் சிங் தாகூர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்து விட்டார்.

இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார்அங்குவிரைந்து சென்று பிணத்தைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கன்னியா குமரி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News