காணியம்மன் கோவில் தேர் திருவிழா
- பல்லாயிர க்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தேர் மீது மிளகு, உப்பு, முத்துக்கொட்டை என பல்வேறு சிறு தானியங்களை வீசி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
- திருவிழாவை காண வரும் பக்தர்கள் வந்து செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்க ப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டி கிராமத்தில் காணியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.
இதில் சுற்றுப்பகுதியில் உள்ள பள்ளிப்பட்டி, இருளப்பட்டி, பாப்பம்பாடி, காந்தி நகர், பாப்பி ரெட்டிப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.
கோவிலில் சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்து க்காட்டாக இஸ்லாமிய மதத்தை சார்ந்தவரிடம் பூசாரி தாலி எடுத்துக் கொடுத்து, அம்மன் கழுத்தில் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் கரகாட்டம், நையாண்டி மேளம், பல்லக்கு, வான வேடிக்கை என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது.
இத்திருவிழாவை ஒட்டி சுற்றுப்பகுதியில் இருந்தும், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர் திருவிழாவை காண இருளப்பட்டியில் குவிந்தனர்.
தேரோட்டமானது அரூர் - சேலம் நெடுஞ்சாலையில் நடைபெறுவதால் போக்குவரத்தை போலீசார் வேறு பாதையில் திருப்பி விட்டனர்.
இதில் பல்லாயிர க்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தேர் மீது மிளகு, உப்பு, முத்துக்கொட்டை என பல்வேறு சிறு தானியங்களை வீசி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
திருவிழாவை காண வரும் பக்தர்கள் வந்து செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்க ப்பட்டது. அசம்பா விதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.