உள்ளூர் செய்திகள்
நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கில் கலெக்டர் ஆய்வு
வேடபாளையம் கிராமத்தில் உள்ள சேமிப்பு கிடங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேடபாளையம் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்பு கிடங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இருப்பு வைக்கப்பட்டிருக்கும் உணவு தானியங்களை கையில் எடுத்து அவற்றின் தரத்தை ஆய்வு செய்தார்.