உள்ளூர் செய்திகள்

மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சியில் இந்திய அரசியலமைப்பு குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமையில் உறுதி மொழி ஏற்று கொண்டனர்.

மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சியில் இந்திய அரசியலமைப்பு குறித்து உறுதி மொழி ஏற்பு

Published On 2022-11-27 15:20 IST   |   Update On 2022-11-27 15:20:00 IST
  • ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமையில் உறுமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • வாசகங்களடங்கிய அரசு உத்தரவின்படி அனைவரும் உறுமொழி ஏற்றனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சியில் இந்திய அரசியலமைப்பு குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமையில் உறுமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி, வார்டு உறுப்பினர்கள், மகாத்மா காந்தி ஊரக வேலை பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு உறுதி மொழியை ஏற்று கொண்டனர்.

இதில் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிக்கும் உறுதியளிக்கும் உடன் பிறப்புணர்வை அவர்கள் அனைவரிடையே வளர்க்கவும், விழுமிய முறைமையுடன் உறுதி பூண்டு, நம்முடைய அரசியலமைப்புப் பேரவையில், ஈங்கிதனால், இந்திய அரசியலமைப்பை ஏற்று, சட்டமாக இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம். என்று வாசகங்களடங்கிய அரசு உத்தரவின்படி அனைவரும் உறுமொழி ஏற்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் சரவணன் செய்திருந்தார்.

Tags:    

Similar News